சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றாக ஒழிப்பதற்கு பல்வேறு துறைகள் இணைந்த பரந்துபட்ட மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுவது அவசியம் என வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவரல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி நஜாட் மால்லா ஜித்துடன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள நஜாட் மால்லா ஜித் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பலதரப்பட்ட நடவடிக்கைகள் அவசியம் எனக் குறிப்பிட்டார். பொருளாதார முன்னேற்றம் செயற்திறன்மிக்க அபிவிருத்தித் திட்டங்கள் சட்ட மற்றும் ஒழுங்கு மாற்றங்கள், கொள்கை மறுசீரமைப்புகள் ஆகியவற்றின் ஊடாக சிறுவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவது முக்கியம் என இருதரப்பினரும் வலியுறுத்தினர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்