France நாட்டில் கொசு மூலம் பரவும் நோய்கள் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். 2026 மே மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் டெங்கு (Dengue), சிக்குன்குனியா (Chikungunya) மற்றும் ஜிகா (Zika) போன்ற நோய்களின் மொத்தம் 92 இறக்குமதி செய்யப்பட்ட (imported) பாதிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் (Santé publique France) வெளியிட்ட தகவலின்படி இந்த 92 வழக்குகளில் 79 பேர் டெங்கு காய்ச்சலாலும் 12 பேர் சிக்குன்குனியா வைரஸாலும், ஒருவர் ஜிகா வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனைத்து நோயாளிகளும் வெளிநாட்டு பயணங்களுக்குப் பிறகு France ற்கு திரும்பியவர்களாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டெங்கு நோய்தான் இந்த ஆண்டின் கொசு பரவும் காலத்தின் தொடக்கத்தில் அதிகமாக கண்டறியப்பட்ட நோயாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் கொசுக்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.





Leave a Reply