2025 ஆம் ஆண்டில் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் CiTIQUE கண்காணிப்பு திட்டத்திற்கு 7,070 Tick கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மனிதர்கள் மற்றும் செல்லப்பிராணிகள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். Grand Est, Auvergne-Rhône-Alpes மற்றும் Occitanie பகுதிகளில் அதிகளவு புகார்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை Île-de-France, Normandie, Pays de la Loire மற்றும் Provence-Alpes-Côte d’Azur பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார ஆய்வுகளின்படிbபிரான்சில் சேகரிக்கப்பட்ட Tick களில் சுமார் 15% வரை Lyme Disease ஏற்படுத்தும் Borrelia burgdorferi என்ற பாக்டீரியாவை சுமந்து செல்லக்கூடும். சில Tick கள் ஒன்றுக்கு மேற்பட்ட நோய் கிருமிகளையும் கொண்டிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Tick கள் France காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் என்ற எண்ணம் தவறானது. பல கடி சம்பவங்கள் வீட்டு தோட்டங்கள் பூங்காக்கள் புல்வெளிகள் மற்றும் பொதுவான பசுமை நிலங்களில் நிகழ்கின்றன. சில ஆய்வுகளின்படி 30% முதல் 50% வரையிலான Tick கடிகள் தனியார் தோட்டங்களிலேயே நிகழ்கின்றன.
Tick ஐ உடனடியாக “tire-tique” (Tick remover) கருவி மூலம் அகற்ற வேண்டும். பின்னர் அந்த இடத்தை நன்றாக கிருமிநாசினியால் சுத்தம் செய்து அடுத்த 30 நாட்கள் கண்காணிக்க வேண்டும். சிவப்பு வளைய வடிவிலான (bull’s-eye) தோல் சிரங்கு தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது Lyme Disease இன் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.






























