Riyadh Saudi Arabia
சவுதி அரேபியாவில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லை பாதுகாப்பு சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளில் ஒரே வாரத்தில் 7,466 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 21 முதல் மே 27, 2026 வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் மொத்தமாக 8,090 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 4,266 பேர் குடியிருப்பு சட்டத்தை மீறியவர்கள், 2,653 பேர் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் 1,171 பேர் தொழிலாளர் சட்டத்தை மீறியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 7,466 பேர் நாடுகடத்தப்பட்டதுடன் 14,484 பேர் தங்களது பயண ஆவணங்களைப் பெறுவதற்காக தங்கள் நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் 572 பேரின் பயண ஏற்பாடுகள் நிறைவு செய்யப்படுகின்றன.
இதேவேளை சட்டவிரோதமாக Riyadh Saudi Arabia எல்லையை கடக்க முயன்ற 1,176 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 68 சதவீதம் எத்தியோப்பியர்கள் 25 சதவீதம் யேமன் நாட்டவர்கள் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள 7 சதவீதமாக உள்ளனர். மேலும், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 71 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு தங்குமிடம் போக்குவரத்து அல்லது வேலைவாய்ப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 21,685 வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Leave a Reply