சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

சவுதி அரேபியா வில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஒரே வாரத்தில் 10,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5,899 பேர் குடியிருப்பு சட்ட மீறல்களுக்காகவும் 3,084 பேர் எல்லைப் பாதுகாப்புச் சட்ட மீறல்களுக்காகவும் 1,742 பேர் தொழிலாளர் சட்ட மீறல்களுக்காகவும் கைது செய்யப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 7,989 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் 14,268 பேர் பயண ஆவணங்களைப் பெறுவதற்காக தங்களது தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் 1,240 பேரின் பயண ஏற்பாடுகள் நிறைவு செய்யப்படுகின்றன.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

அதேசமயம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 1,418 பேரும், நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 34 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து அல்லது வேலைவாய்ப்பு வழங்கிய 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 22,026 வெளிநாட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சவுதி அரேபியா வில் குடியேற்ற மற்றும் தொழிலாளர் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்