இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வெளிநாட்டு துறையில் ஏற்பட்ட அழுத்தங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக வெளிநாட்டு சந்தைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாணய சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு வருமானத்தில் தேவையான செலவுகளை கழித்த பின்னர் மீதமுள்ள தொகையை அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்குள் இலங்கை ரூபாயாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க அவர்களின் உத்தரவின் கீழ் இந்த அறிவிப்பு கெஜட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டு நாணய மேலாண்மையை வலுப்படுத்தவும் பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.






























