போக்குவரத்து துறையின் தரத்தையும் பயணிகள் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள் சட்டவிரோத போக்குவரத்தால் ஏற்படும் அபாயங்களை தடுக்க உதவுவதாக TGA தெரிவித்துள்ளது.
விதிமீறல்களுக்கு எதிராக வாகன பறிமுதல் மற்றும் அபராதம் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிய சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் பயணிகளை அழைத்துச் செல்லும் செயல்களுக்கு 11,000 ரியால் வரை அபராதம் மற்றும் 25 நாட்கள் வரை வாகன பறிமுதல் நடைமுறையில் இருக்கும்.
மேலும் உரிமம் பெறாத போக்குவரத்தை இயக்குவோருக்கு 20,000 ரியால் வரை அபராதம் மற்றும் 60 நாட்கள் வரை வாகன பறிமுதல் விதிக்கப்படலாம். மேலும் மீண்டும் மீண்டும் விதிமீறல் ஏற்பட்டால் வாகனம் பொது ஏலத்தில் விற்கப்படும் சவுதி அல்லாதவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






























