இதுவரை நோயாளிகள் தங்களது சொந்த செலவில் மாதத்திற்கு நூற்றுக்கணக்கான யூரோக்கள் செலுத்தி வந்த நிலையில் இனி குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் இந்த மருந்துகளுக்கான செலவின் 65% வரை திருப்பிச் செலுத்தும் சலுகையை பெற முடியும்.
Wegovy (Semaglutide) மற்றும் Mounjaro (Tirzepatide) ஆகியவை பசியைக் குறைத்து உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் GLP-1 வகை மருந்துகளாகும். இந்த சலுகை, BMI 40 அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கும் BMI 35 அல்லது அதற்கு மேல் இருந்து நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும்.
மேலும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைந்தது 6 மாதங்கள் முயற்சி செய்தும் போதிய எடை குறைப்பு ஏற்படாதவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். ஆரம்ப பரிந்துரை உடல் பருமன் சிகிச்சை நிபுணர்கள் அல்லது சிறப்பு மைய மருத்துவர்களால் வழங்கப்பட வேண்டும் என்றும் பின்னர் பொதுமருத்துவர்கள் மூலம் சிகிச்சையை தொடர முடியும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் செய்திகள்
இந்த நடவடிக்கை, பிரான்சில் உடல் பருமன் சிகிச்சையை அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.





























