பிரான்ஸ் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவதற்கு கட்டணம் அறவிடப்படும்.

பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டு அல்லது ஐரோப்பிய நாடுகளின் டிரைவிங் லைசன்ஸை பிரான்ஸ் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவதற்கு இனி கட்டணத்துடன் நடைபெறும் புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 மே 4 முதல் இந்த மாற்ற செயல்முறைக்கு 40 யூரோ (கயானாவில் 20 யூரோ) ஸ்டாம்பு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் புதிய லைசன்ஸை தயாரிக்கும் மற்றும் அனுப்பும் செலவுகளுக்காக வசூலிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள நாடுகளிலிருந்து வரும் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் பிரான்சில் குடியேறிய பிறகு 1 வருடம் வரை தங்கள் பழைய லைசன்ஸை பயன்படுத்தலாம்.

அதன் பிறகு தொடர்ந்து வாகனம் ஓட்ட வேண்டுமானால், அதை பிரெஞ்ச் லைசன்ஸாக மாற்றுவது கட்டாயமாகும். ஆனால் இது அந்த நாட்டுடன் பிரான்சுக்கு பரஸ்பர ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே சாத்தியம் இல்லையெனில் பிரான்சில் புதிய டிரைவிங் தேர்வு எழுத வேண்டி இருக்கும்.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய அல்லது EEA நாடுகளின் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் அது செல்லுபடியாக இருக்கும் வரை பிரான்சில் பயன்படுத்தலாம். ஆனால் லைசன்ஸ் இழந்தால் சேதமடைந்தால் புதிய வகை சேர்க்க வேண்டுமானால் அல்லது விதிமுறை மீறல்கள் காரணமாக மாற்றம் தேவையானால் மட்டும் பிரெஞ்ச் லைசன்ஸாக மாற்ற வேண்டும்.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading