சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்ஸில் மாணவர்கள் அனைவருக்கும் 1 யூரோ உணவு மே 4 முதல்.

பிரான்ஸில் இதுவரை உதவித்தொகை பெறும் மாணவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட 1 யூரோ உணவு திட்டம் 2026 மே 4 முதல் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள CROUS பல்கலைக்கழக உணவகங்களில் (restaurants universitaires) அனைத்து மாணவர்களும் குறைந்த விலையில் உணவை பெற முடியும். மாணவர் அடையாள அட்டை தொழில் பயிற்சி மாணவர் அட்டை டாக்டரேட் மாணவர்கள் அல்லது சிவில் சேவை செய்பவர்கள் ஆகியோர் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள்.

இதற்கு Izly கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒவ்வொரு உணவு நேரத்திலும் ஒரு முறை மட்டுமே 1 யூரோ உணவை பெற முடியும். இந்த உணவு பொதுவாக ஒரு முக்கிய உணவுப் பொருளுடன் அதிகபட்சம் இரண்டு துணை உணவுகள் (starter, dessert போன்றவை) கொண்டதாக இருக்கும் கூடுதல் உணவுகளுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் மதிய உணவுடன் சேர்த்து இரவு உணவாகவும் இந்த சலுகை வழங்கப்படும். முன்பு இந்த உணவு 1 யூரோவாக கிடைத்தது குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டுமே, மற்ற மாணவர்கள் சுமார் 3.30 யூரோ செலுத்த வேண்டியிருந்தது. அதிக தேவையை சமாளிக்க, சில CROUS மையங்களில் click-and-collect போன்ற புதிய விநியோக முறைகளும் அறிமுகப்படுத்தப்படலாம்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading