கடன் திட்டம் – பிரான்ஸ் அரசாங்கம் 50,000 யூரோ வரை உதவுகிறது.
பிரான்ஸ் அரசாங்கம் சிறிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 50,000 யூரோ வரை வழங்கப்படும் “Prêt Flash Carburant” என்ற அவசர கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (TPE மற்றும் PME) இந்த உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து விவசாயம் மற்றும் மீன்பிடி துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் இந்த கடனை பெற தகுதியானவர்கள்.
இந்த கடன் திட்டம் ஏப்ரல் 13 இல் இருந்து நடைமுறைக்கு வருகிறது இதன் ஊடாக 5,000 முதல் 50,000 யூரோ வரை பெறலாம். வருடத்திற்கு சுமார் 3.8% வட்டி விகிதத்தில் 36 மாத காலத்திற்கு கடன் வழங்கப்படும். முதலில் 12 மாதங்கள் மூலதனத்தை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்பதால் நிறுவனங்களுக்கு உடனடி நிதி அழுத்தம் குறையும்.
இந்த உதவியை பெற நிறுவனங்கள் குறைந்தது 1 வருடமாக செயல்பட்டு இருக்க வேண்டும். மேலும் எரிபொருள் செலவு நிறுவன வருமானத்தின் குறைந்தது 5% ஆக இருக்க வேண்டும். விண்ணப்பம் முழுவதும் ஆன்லைன் மூலம் Bpifrance தளத்தில் சமர்ப்பிக்கலாம் மற்றும் அனுமதி கிடைத்தால் சில நாட்களுக்குள் பணம் வழங்கப்படும்.
எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்ட நிதி சிரமங்களை சமாளிக்க இந்த திட்டம் தற்காலிக உதவியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது ஒரு உதவித்தொகை அல்ல திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் என்பதால் நிறுவனங்கள் கவனமாக முடிவு எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.













Leave a Reply