சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

பிரான்சு அரசு 2026 ஆம் ஆண்டுக்கான நிதிச் சட்டத்தின் (Loi de finances pour 2026) பகுதியாக மே மாதம் முதல் எல்லா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தினமும் ஒரு உணவை €1 க்கு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை மூலம் உணவுக்கான செலவு காரணமாக கல்வி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்தும் மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது CROUS (Centre régional des œuvres universitaires et scolaires – பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி சேவைகளுக்கான பிராந்திய மையங்கள்) நிர்வகிக்கும் பல்கலைக்கழக உணவகங்களில் உதவித்தொகை பெறும் மாணவர்கள் மற்றும் நிதி நெருக்கடியை அனுபவிக்கும் மாணவர்கள் ஒரு உணவை €1 க்கு வாங்குகிறார்கள்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

ஆனால் உதவித்தொகை பெறாத மற்ற மாணவர்கள் அதே உணவை €3.30 ஆக செலுத்த வேண்டியுள்ளது. இந்த புதிய திட்டம் அந்த விலைவித்தியாசத்தை அகற்றும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு உணவின் விலையை €1 க்கு பொதுமைப்படுத்தும்.

இந்த திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தும் பணிகள் மே மாதத்தில் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் குறைந்த வருகை கொண்ட இடங்களில் சோதனை நடைபெறும் பின்னர் 2026 செப்டம்பர் மாதம் பள்ளி ஆண்டு தொடக்கத்துடன் முழுமையாக செயல்படுத்தப்படும்.

எல்லா மாணவர்களுக்கும் €1 உணவுக்கான அணுகல் விவரங்கள் விரைவில் CROUS மூலம் வெளியிடப்படும். இந்த நடவடிக்கை மாணவர்களின் பொருளாதார சிரமத்தை குறைத்து கல்வி வாழ்வில் சம வாய்ப்புகளை வழங்கும் முக்கியமான முயற்சி எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்