சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

இலங்கை உயர்கல்வி மாணவர்களுக்கு அதிஷ்டம் – 20 மில்லியன் வரை அரச உதவி

இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்காக வெளிநாடுகளில் இளமாணிப் பட்டப்படிப்பை தொடர 200 அரச புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசின் கொள்கைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த அரச உதவி திட்டம் 2025 முதல் 2029 வரை ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாக 2026/2027 கல்வியாண்டிற்காக 25 முதல் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தேர்வாகும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூபாய் 20 மில்லியன் வரை நிதியுதவி வழங்கப்படுவதுடன் பாடநெறி கட்டணம், தங்குமிடம், உணவு, மருத்துவ காப்பீடு, விமானச்சீட்டு மற்றும் விசா செலவுகள் உள்ளிட்ட அனைத்தும் அரசால் மேற்கொள்ளப்படும்.

இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும் 2025 உயர்தரப் பரீட்சையில் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் மேலும் ஆங்கிலத்தில் திறமை (குறைந்தபட்சம் ‘C’ சித்தி) அவசியமாகும். விண்ணப்பிக்கும் போது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவர்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இறுதித் திகதி 2026 மே 11 ஆகும்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

விண்ணப்பிக்கவும்

உலகளாவிய அளவில் தேவை அதிகரித்து வரும் மற்றும் இலங்கையில் கற்க முடியாத துறைகளைத் தெரிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன் படிப்பை முடித்த பின் கட்டாயமாக இலங்கை திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்