தற்போது 23,000 பேரை மட்டுமே ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பது தொடர்பாக முன்னர் கடும் எதிர்ப்புகள் எழுந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களை நியமிக்கும் விதிமுறைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் முன்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் இருவருக்கும் ஆசிரியர் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை வெளிப்படுத்துவதாக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.




























