சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா, பதட்டம் உச்சம்

ஓமான் வளைகுடா பகுதியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை தெரிவித்துள்ளார். இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்த கடற்படை தடை (naval blockade) முறையை மீற முயன்றதாக கூறப்படுகிறது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

அமெரிக்க கடற்படையின் USS Spruance என்ற போர்க்கப்பல் அந்த கப்பலை நிறுத்த எச்சரித்தபோதும் அது கட்டளையை பின்பற்றவில்லை. இதையடுத்து கப்பலின் எஞ்சின் அறையை தாக்கி செயலிழக்கச் செய்து பின்னர் அமெரிக்க மெரைன்கள் கப்பலை கைப்பற்றினர்.

இந்த சம்பவம் அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா ஈரானை பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக அழுத்தம் கொடுக்க ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி கடற்படை தடையை அமல்படுத்தியது. இந்த நீரிணை உலக எண்ணெய் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான பாதையாகும்.

மேலும் இந்த கப்பல் “Touska” என்ற பெயரில் இருந்ததாகவும் இது முன்பே சட்டவிரோத சரக்குகளை ஏற்றிச் சென்றதாக அமெரிக்கா சந்தேகித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

இதுவரை ஈரான் இந்த சம்பவம் குறித்து உடனடி பதிலை வழங்கவில்லை. ஆனால் இந்த நிகழ்வு மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்