UK பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு விசேட சலுகை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) நடைமுறையால் பல நாடுகளில் விமான நிலையங்களில் நீண்ட நேர காத்திருப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் கிரீஸ் அரசு முக்கியமான தீர்வை அறிவித்துள்ளது.

2026 ஏப்ரல் 10 முதல் UK (பிரிட்டன்) பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு உயிரணு (biometric) பதிவு கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரல் ரேகை மற்றும் முகஅடையாள சரிபார்ப்பு போன்ற செயல்முறைகள் தவிர்க்கப்படுவதால் விமான நிலையங்களில் காத்திருக்கும் நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவு கோடைக்கால சுற்றுலா பருவத்தில் பயணிகளை ஈர்க்கவும் விமான நிலைய நெரிசலை குறைக்கவும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பல ஐரோப்பிய நாடுகளில் EES காரணமாக 2 முதல் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்படுகின்ற நிலையில் கிரீஸ் இந்த சலுகையால் மற்ற மெடிடரேனிய நாடுகளை விட முன்னிலை பெற்றுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் UK பயணிகள் கிரீஸில் பழைய முறையில் விரைவாக பாஸ்போர்ட் சோதனையை முடித்து நுழைய முடியும். இதனால், கோடைக்கால விடுமுறைக்கு கிரீஸ் செல்லும் பயணிகளுக்கு சிரமமின்றி, வேகமான அனுபவம் கிடைக்கும் என சுற்றுலா துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading