ஓட்டுநர்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் கட்டணம் செலுத்தும் முறையையோ அல்லது ஒரு வாகனத்துக்கு மாதம் 1,500 இலங்கை ரூபாய் செலுத்தி வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ளும் சந்தா முறையையோ தேர்வு செய்யலாம்.
வாகன வகைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள்
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு ஒரு பயணத்துக்கு 10 ரூபாயிலிருந்து கட்டணம் தொடங்குகிறது. கார்களுக்கு 30 ரூபாயும், வேன்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு பயணக் கட்டணத்திலும் ஒரு சதவீதத்தை இழப்பதற்குப் பதிலாக, ஓட்டுநர்கள் தங்களின் வருமானத்தில் அதிகப் பகுதியை வைத்திருக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Uparima commission free ride hailing முறையின் மூலம் பயணிகளுக்கும் போட்டித்தன்மை கொண்ட, குறைந்த கட்டணப் பயணங்களை வழங்குவதே நோக்கம் என நிறுவனம் கூறியுள்ளது. Uparima செயலி, போக்குவரத்துடன் வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளையும் ஒருங்கிணைக்கிறது.
Hire.Uparima.lk சேவையின் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வெளியிடவும், விண்ணப்பங்களை நிர்வகிக்கவும் முடியும். பயணிகளுக்கான Uparima செயலியும், ஓட்டுநர்களுக்கான தனி செயலியும் Apple App Store மற்றும் Google Play Store-ல் கிடைக்கின்றன.































