ஆடை உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல தொழிற்துறைகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கினாலும் தேவையான மனிதவளத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் வேலையில்லா பட்டதாரிகள் ஒருபுறம் காணப்படுவதும் நிறுவனங்கள் ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதும் முரண்பாடான சூழல் என சுட்டிக்காட்டினார்.
இதனைத் தீர்க்க பல்கலைக்கழக முதலாம் ஆண்டிலிருந்தே மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சி வழங்கவும் வணிக மொழித்திறனை மேம்படுத்த இலவச பயிற்சிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பல்கலைக்கழக கல்வி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



























