சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்ஸ் – ஏப்ரல் 15 முதல் நாய்களை கட்டாயமாக கயிற்றில் பிடிக்க வேண்டும்.

பிரான்சில் காடு பகுதிகளில் நடைபயணம் செல்லும் நாய் உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போலவே 2026 ஏப்ரல் 15 முதல் ஜூன் 30 வரை காடு பகுதிகளில் நாய்களை கட்டாயமாக கயிற்றில் (leash) பிடித்து வைத்திருக்க வேண்டும்.

இந்த விதி குறிப்பாக காட்டு விலங்குகளின் இனப்பெருக்க காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் காட்டு பாதைகள் (roads, trails) தவிர்ந்த பகுதிகளில் நாய்களை விடுவித்து விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆண்டு முழுவதும் நாய்கள் உரிமையாளரிடம் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லக் கூடாது என்றும் விதி உள்ளது. இந்த நடவடிக்கை பறவைகள் மற்றும் பிற காட்டு விலங்குகளை நாய்கள் தாக்குவது அல்லது பயமுறுத்துவது போன்ற சம்பவங்களை தவிர்க்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விதியை மீறினால் பிரான்ஸ் அரசு 135 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காடு பகுதிகளில் உள்ள காட்டு விலங்குகளை உணவு கொடுக்க கூடாது அருகில் செல்லவும் கூடாது என்பதையும் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர். இது விலங்குகளின் இயற்கை வாழ்வை பாதுகாக்க முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading