2026 ஏப்ரல் 23 அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி பிரான்சில் வேலை இழப்புப் படி நிவாரணம் (ARE – Return to Work Allowance) பெறுவதற்கான சில நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளன. பொதுவாக வேலை இழப்புப் படி நிவாரணம் பெற ஒருவர் கடந்த 24 மாதங்களில் குறைந்தது 6 மாதங்கள் வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கால அளவு 36 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 1 முதல் “முதல் முறை வேலை இழந்தவர்கள்” எனப்படும் இதற்கு முன்பு ஒருபோதும் வேலை இழப்புப் படி நிவாரணம் பெறாதவர்கள் அல்லது கடந்த 20 ஆண்டுகளாக பெறாதவர்கள் புதிய தளர்வின் கீழ் பயனடையலாம். அவர்கள் இப்போது குறைந்தது 5 மாதங்கள் (108 நாட்கள் அல்லது 758 மணிநேரங்கள்) வேலை செய்திருந்தால் போதுமானது. இந்த புதிய விதி அவர்களுக்கு நிவாரணம் பெறும் வாய்ப்பை எளிதாக்குகிறது.
இந்த “முதல் முறை” வேலை தேடுபவர்கள் என்றாலும் அவர்கள் மற்ற அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது France Travail-ல் பதிவு செய்திருக்க வேண்டும் வேலை தேடும் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் மற்றும் உடனடியாக வேலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
மேலும், இவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரண காலம் 5 மாதங்கள் (152 நாட்கள்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இது 6 மாதங்கள் ஆகும். நிவாரணத் தொகை கணக்கீடு மற்றும் பிற விதிமுறைகள் மற்ற வேலை தேடுபவர்களுக்கு இருக்கும் அதே முறையில் தொடரும்.


























