பிரான்சில் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் “Prime d’activité” என்ற அரசு உதவி தொகை 2026 ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது. இந்த உதவி தொகை மாதத்திற்கு சராசரியாக 50 யூரோ வரை அதிகரிக்கும் என அரசு அறிவித்துள்ளது.
தற்போது இந்த உதவியை சுமார் 4.5 மில்லியன் மக்கள் CAF மூலம் பெறுகின்றனர், மேலும் புதிய உயர்வால் சுமார் 3 மில்லியன் குடும்பங்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் முதலில் 2015-ஆம் ஆண்டு வேலை செய்பவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த உதவி 18 வயதுக்கு மேற்பட்ட வேலை செய்பவர்கள், சம்பளம் குறைவாக இருக்கும் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியோருக்காக வழங்கப்படுகிறது. பிரான்சில் நிலையான முறையில் வசிக்க வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனை.
குடும்பத்தின் வருமானம், உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொறுத்து இந்த உதவி தொகை கணக்கிடப்படுகிறது. இந்த உயர்வு மூலம் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவுவது அரசின் நோக்கமாகும்.













Leave a Reply