அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படாவிட்டால் அவை தாக்குதலுக்குப் பதிலாக மாறக்கூடும் என்றும் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் சந்தையை பெரிதும் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏனெனில் உலகின் சுமார் 20% எண்ணெய் இந்த கடல் வழியாகவே கடத்தப்படுகிறது. தற்போதைய அமெரிக்கா–ஈரான் மோதலால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்து, பல கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

























