France fuel aid 2026, France Tamil news
பிரான்சில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அரசு புதிய €1.2 பில்லியன் மதிப்பிலான உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக வேலைக்காக தினமும் நீண்ட தூரம் பயணம் செய்யும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இந்த உதவி வழங்கப்பட உள்ளது.
இந்த France fuel aid 2026 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Prime grands rouleurs எனப்படும் fuel allowance தொகை €50 இலிருந்து €100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உதவிக்கு விண்ணப்பங்கள் 2026 மே 27 முதல் impots.gouv.fr தளத்தில் திறக்கப்படும்.
இந்த fuel aid பெறுவதற்கு
- பிரான்சில் வசித்து இருக்க வேண்டும்
- 2024 வரி வருமானம் (revenu fiscal de référence) ஒரு household shareக்கு €16,880 ஐ விட குறைவாக இருக்க வேண்டும்
- வேலைக்காக தினமும் குறைந்தது 15km தூரம் (ஒரு வழி) பயணம் செய்ய வேண்டும்
அல்லது- ஆண்டிற்கு 8,000km க்கும் அதிகமாக தொழிலுக்காக வாகனம் ஓட்ட வேண்டும்
இந்த உதவி கீழ்க்கண்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்
- பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்கள்
- மீண்டும் சார்ஜ் செய்ய முடியாத கலப்பின வாகனங்கள்
- தனிப்பட்ட பயன்பாட்டு கார்கள்
ஆனால் Electric cars, Hydrogen vehicles, Company cars மற்றும் Heavy goods vehicles இந்த உதவிக்கு தகுதி பெறாது.
கூடுதல் உதவிகள்
அரசு மேலும் சில தொழில்களுக்கு தனிப்பட்ட உதவிகளையும் நீட்டித்துள்ளது
- மீனவர்கள் – லிட்டருக்கு €0.30 – €0.35
- விவசாயிகள் – லிட்டருக்கு €0.15
- கட்டுமான நிறுவனங்கள் – construction dieselக்கு லிட்டருக்கு €0.20
- Taxi drivers – Electric vehicle வாங்க €5,500 வரை உதவி





Leave a Reply