2026 ஜூலை முதல் ஏற்கனவே CAF மூலம் ஏதேனும் ஒரு உதவித்தொகையைப் பெறும் நபர்கள் RSA அல்லது Prime d’activité க்கு முதல் முறையாக விண்ணப்பிக்கும் போது அவர்களின் சம்பளம் மற்றும் சில வருமானத் தகவல்கள் தானாகவே முன்நிரப்பப்பட்ட (Pre-filled) நிலையில் காண்பிக்கப்படும். இதனால் விண்ணப்பத்தை விரைவாக சமர்ப்பிக்கவும் சரியான தொகையை பெறவும் உதவும்.
எனினும் விண்ணப்பதாரர்கள் முன்நிரப்பப்பட்ட தகவல்களை கவனமாகச் சரிபார்த்து தேவையான திருத்தங்கள் அல்லது சேர்க்கைகளை செய்து பின்னரே விண்ணப்பத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று CAF அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாற்றம் ஏற்கனவே 2025 முதல் நடைமுறையில் உள்ள காலாண்டு வருமான அறிக்கைகளின் (Déclaration trimestrielle) முன்நிரப்பும் சேவையைத் தொடர்ந்து முதல் விண்ணப்பங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட புதிய கட்டமாகும். இதன் மூலம் நிர்வாக நடைமுறைகள் எளிமையாகிnஅதிகமான தகுதியான நபர்கள் தங்களுக்கு உரிய நலன்களை எளிதாகப் பெற முடியும் என CAF தெரிவித்துள்ளது.





























