பிரான்சில் குறைந்த வருமானம் பெறும் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் Prime d’activité என்ற கூடுதல் வருமான உதவி தொகை 2026 ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான நிதி சட்டத்தின் அடிப்படையில், இந்த உதவி தொகை பெறும் ஒவ்வொரு பயனாளிக்கும் மாதத்திற்கு சராசரியாக சுமார் 50 யூரோ வரை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Prime d’activité என்பது 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். இது வேலை செய்பவர்களின் வருமானத்தை உயர்த்தவும், குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாங்கும் திறனை (purchasing power) ஆதரிக்கவும் உருவாக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் (apprentis) மாதத்திற்கு 1,117.26 யூரோவுக்கு மேல் வருமானம் பெற்றால் அல்லது தனியாக குழந்தைகளை பராமரித்து வந்தால் அவர்களும் இந்த உதவியை பெற முடியும்.
இந்த உதவியை பெறுவதற்கு குறைந்தது 18 வயது இருக்க வேண்டும், வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவராக இருக்க வேண்டும். ஒரே நபரின் மாத வருமானம் 2,000 யூரோவை விட அதிகமாக இருந்தால் இந்த உதவி கிடைக்காது. மேலும் பிரான்சில் சட்டப்படி வாழ்ந்து வருபவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் அல்லது செல்லுபடியாகும் நீண்டகால குடியிருப்பு அனுமதி கொண்ட வெளிநாட்டவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த தொகை CAF (Caisse d’Allocations Familiales) அல்லது MSA மூலம் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை குழந்தைகள் மற்றும் வேலை மூலம் பெறப்படும் வருமானம் போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உதவி தொகை கணக்கிடப்படும்.





Leave a Reply