பள்ளி தொடக்க உதவித்தொகை – பிரான்ஸ் புதிய அறிவிப்பு.
பிரான்சில் 2026 கல்வியாண்டுக்கான பள்ளி தொடக்க உதவித்தொகை (Allocation de rentrée scolaire – ARS) தொகை 1 ஏப்ரல் 2026 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை 6 முதல் 18 வயது வரை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இது பள்ளி பொருட்கள் உணவகம் செலவுகள் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளை சமாளிக்க உதவுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான புதிய தொகைகள் குழந்தையின் வயதின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
- 6 – 10 வயது: 426.87 €
- 11 – 14 வயது: 450.41 €
- 15 – 18 வயது: 466.02 €
இந்த உதவித்தொகை பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும்.
இந்த உதவியை பெற குடும்பத்தின் வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவை விட குறைவாக இருக்க வேண்டும். 2026 கல்வியாண்டுக்கான தகுதி கணக்கீட்டில் 2024 ஆண்டின் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தை உள்ள குடும்பத்திற்கு அதிகபட்ச வருமான வரம்பு 28,956 € ஆகும் குழந்தைகள் அதிகமானால் இந்த வரம்பும் அதிகரிக்கும்.
6 முதல் 15 வயது குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு இந்த தொகை தானாக வழங்கப்படும். 16 முதல் 18 வயது மாணவர்கள் இருப்பின், அவர்கள் தொடர்ந்து கல்வியில் உள்ளனர் என்பதை ஜூலை மாதம் முதல் CAF அல்லது MSA கணக்கில் உறுதிப்படுத்த வேண்டும்.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042
இந்த உதவித்தொகை, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பள்ளி செலவுகளை எளிதாக்கும் முக்கியமான நிதி ஆதரவாகும்.













Leave a Reply