இந்த அறிவிப்பை பரிசு பெற்ற நபரே செய்ய வேண்டும். பரிசு பெறுபவர் சிறுவர் அல்லது சட்டரீதியாக பாதுகாக்கப்படும் நபராக இருந்தால் அவரின் சட்ட பிரதிநிதி இந்த நடைமுறையை மேற்கொள்ளலாம். வழக்கமான குடும்ப பரிசுகள் (பாக்கெட் மணி, கிறிஸ்துமஸ் பரிசுகள், பிறந்தநாள், திருமணம், பட்டமளிப்பு போன்ற விசேஷ நிகழ்வுகளில் வழங்கப்படும் பரிசுகள்) தானமாகக் கருதப்படாது அவற்றுக்கு அறிவிப்பு தேவையில்லை.
ஆனால் வழங்குபவரின் மொத்த சொத்துகளில் 2%-ஐ அல்லது ஆண்டுத் தூய வருமானத்தின் 2.5%-ஐ மீறும் அளவிலான “அசாதாரண” பரிசுகள் அல்லது உயர்மதிப்புடைய பொருட்கள் கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டும். இதற்கான குறிப்பிட்ட சட்ட வரம்பு இல்லாததால், சந்தேகம் இருந்தால் வரி நிபுணரை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.
2026 ஜனவரி 1 முதல் பரிசு அல்லது தானம் எப்போது வழங்கப்பட்டிருந்தாலும் அனைத்துப் பரிசு அறிவிப்புகளும் impots.gouv.fr இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதுவரை விருப்பப்பட்டால் உள்ளூர் வரி அலுவலகத்தில் காகிதப் படிவம் மூலம் அறிவிக்கலாம். 2021 முதல் ஆன்லைன் சேவை இருந்தாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிர்வாக எளிமைக்காக ஆன்லைன் முறையை கட்டாயமாக்கப்படுவதாக வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முறையில் அறிவித்தால், பரிசு வரலாறு நிரந்தரமாக பார்க்கலாம், உடனடி செயலாக்கம் மற்றும் பாதுகாப்பான ரசீது கிடைக்கும், மேலும் செலுத்த வேண்டிய பரிசு வரி தானாக கணக்கிடப்பட்டு ஆன்லைனிலேயே பாதுகாப்பாக செலுத்த முடியும். சில குறிப்பிட்ட வகை பரிசுகளுக்கு ஆன்லைன் கட்டாயம் இல்லை; அவற்றிற்கு காகித அறிவிப்பே தொடரும் எனவும் பிரான்ஸ் வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.






























