வீட்டுச் சொத்து தகவல் அறிவிப்பது கட்டாயம் – பிரான்ஸ்
பிரான்ஸ் அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி 2026ஆம் ஆண்டில் வீட்டுச் சொத்து (immobilier) வைத்திருக்கும் உரிமையாளர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அவற்றின் பயன்பாட்டு நிலையை கட்டாயமாக அறிவிக்க வேண்டும். 2023 முதல் நடைமுறையில் உள்ள இந்த விதியின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 நிலவரப்படி வீடு வசிப்பில் உள்ளதா வாடகைக்கு விடப்பட்டதா அல்லது காலியாக உள்ளதா என்பதைக் குறித்த தகவலை வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக 2025 ஜனவரி 2 முதல் 2026 ஜனவரி 1 வரை சொத்தின் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் (புதிய வாடகையாளர், வீடு காலியாகிவிட்டது, முதன்மை வசிப்பிடம் அல்லாத நிலை போன்றவை) அல்லது கடந்த ஆண்டு அறிவிக்காத மாற்றங்கள் இருந்தால் அல்லது இதுவரை எந்த அறிவிப்பும் செய்யாதிருந்தால் இந்த தகவலை 2026 ஜூலை 1க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அறிவிப்பை ஆன்லைனில் “Gérer mes biens immobiliers” என்ற சேவையின் மூலம் impots.gouv.fr தளத்தில் உள்ள தனிப்பட்ட கணக்கில் செய்யலாம். வருமான வரி அறிவிப்பு செய்யும் போது கூட இதைச் சேர்த்து அறிவிக்கலாம். டிஜிட்டல் வசதி இல்லாதவர்களுக்கு அச்சு படிவம் மூலம் அறிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அரசுக்கு இரண்டாம் வீடுகள் மற்றும் காலியாக உள்ள வீடுகளுக்கு விதிக்கப்படும் வரிகள் போன்றவற்றை சரியாக கணக்கிட உதவுகின்றன.





Leave a Reply