நகர்ப்புறங்கள் மற்றும் மக்கள் அடர்த்தி அதிகமான பகுதிகளில் டெங்கு பரவல் தீவிரமடைந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மழைக்கால சூழ்நிலை மற்றும் நீர் தேங்கும் இடங்கள் நோய் பரவலுக்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவ நிபுணர்கள் இந்த புதிய வகை வைரஸ் காரணமாக சில நோயாளிகளில் தீவிர அறிகுறிகள் காணப்படக்கூடும் என்பதால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல், நீர் தேங்காமல் தடுப்பது, கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மிக முக்கியம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.சுகாதார அமைச்சு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
































