Tag: dengue
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இணையவழியில் நடத்த தீர்மானித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதேவேளை பல்கலைக்கழகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அனைத்து கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர் […]
நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கிய நடவடிக்கையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி பாடசாலை மாணவர்கள் வழக்கமான சீருடையுடன் இணைந்து கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார். தற்போதைய டெங்கு அபாய நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற […]
இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 67,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் ஜூலை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 10,685 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். நேற்று (10) ஒரே நாளில் மட்டும் சுமார் 1,110 புதிய […]
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக ஒழிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், முப்படைகள் மற்றும் பொலிஸாரை இணைத்த விசேட கூட்டுத் திட்டம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் காணப்படும் 23 வலயங்களை இலக்காகக் கொண்டு தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் விசேட சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மகரகம, […]
நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணத்தையும் உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார். தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தற்போது தனியார் ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைக்காக சுமார் 1,200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவது குறைந்த வருமானம் பெறும் […]
இலங்கையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் டி.ஆர். மதுர செனெவிரத்ன மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல். வசந்தகுமார தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக விடுதிகளும் இந்தக் காலப்பகுதியில் முழுமையாக மூடப்பட்டிருக்கும் நிலையில், இராஜகிரிய மற்றும் தெஹிவளை பகுதிகளில் உள்ள […]
அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்த திட்டம் அல்ல என்றும் அவர் ஆட்சியில் தொடர்ந்திருந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டியிருப்பார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் இன்று (30) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் பொருளாதார நிலைமாற்றுச் சட்டத்தின் மூலம் தெளிவான பொருளாதார திட்டம் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் தற்போதைய ஆட்சியின் அனுபவமின்மையால் […]
நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு இதுவரை 18,412 பொசன் தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுடா நாளை (30) மற்றும் ஜூலை 1 ஆம் தேதி செயல்படவுள்ள தான்சல்கள் அனைத்தும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறினார். மேலும் பொசன் விழா நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார். உணவு மற்றும் பானங்களை வழங்கும் […]
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்று புதிய அல்லது மாற்றமடைந்த டெங்கு வைரஸ் காரணமாக ஏற்பட்டது என்ற அரசின் சில கருத்துகளை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர். இதற்கு ஆதாரமாக எந்த அறிவியல் சான்றும் இதுவரை இல்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் லக் குமார் பெர்னாண்டோ இலங்கையில் எந்த ஆய்வகமும் புதிய டெங்கு வைரஸ் வகையை இதுவரை கண்டறியவில்லை என்று தெரிவித்தார். அதேவேளை மூத்த வைத்திய நிபுணர் டாக்டர் உதித விஜேவிக்ரம […]
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையின்படி மேல் மாகாணமே டெங்கு பாதிப்பில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுடன் பத்தரமுல்ல, மகரகம, பிலியந்தலை, […]