நேற்று (10) ஒரே நாளில் மட்டும் சுமார் 1,110 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளமை நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதை காட்டுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளின் கொள்ளளவு முழுமையாக நிரம்பியுள்ளதுடன் புதிய நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையளிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடுமையான பணிச்சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் உள்நோயாளர் விடுதிகளிலும் கடும் இடநெருக்கடி நிலவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு கொசு பெருகும் இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





























