பல்கலைக்கழக விடுதிகளும் இந்தக் காலப்பகுதியில் முழுமையாக மூடப்பட்டிருக்கும் நிலையில், இராஜகிரிய மற்றும் தெஹிவளை பகுதிகளில் உள்ள விடுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இந்த காலத்தில் பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதிகளில் டெங்கு ஒழிப்பு நுளம்பு கட்டுப்பாடு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தற்போதைய டெங்கு நிலைமை தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் அது தொடர்பிலும் கண்காணிப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஏனைய பல்கலைக்கழகங்கள் உயர் ஆபத்து வலயங்களில் இல்லாத காரணத்தால் அவற்றின் கல்விச் செயற்பாடுகள் வழமையான முறையில் தொடரும் என்றும், தற்போதைக்கு வேறு எந்த பல்கலைக்கழகத்தையும் மூடத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
































