September 8, 2026
Breaking News
குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு குவைத்தில் 7,000 ஆசிரியர்களுக்கு சஹேல் செயலி மூலம் பணிநீக்க அறிவிப்பு ஓமனில் மின்சார வாகன சார்ஜிங்கிற்கு அக்டோபர் 1 முதல் புதிய கட்டணம் ஜோயி பார்டனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு: மார்ச் வரை சிறை பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு பிரான்ஸில் U15 கால்பந்து போட்டி: இளம் நடுவரை வீரரின் தந்தை தாக்கியதாக புகார் காங்கோவில் எபோலா பரவல்: நான்கு மாதங்களுக்குப் பின்னும் தொடரும் நெருக்கடி 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர் ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர் பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை மின்வலையமைப்பு சேதப்படுத்தல் வழக்கில் ஜெர்மனியில் 48 வயது சந்தேகநபர் கைது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு

Tag: Higher Education

புதுமைக்கு கை கோர்த்த கொழும்புப் பல்கலைக்கழகம்

Innovation Partnership, இலங்கையில் புதுமை, தொழில்முனைவு மற்றும் ஆய்வு முடிவுகளை வர்த்தக ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு (SLIC) ஆகியவற்றுக்கு இடையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கும் தொழில் உலகிற்கும் கொண்டு செல்லும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள Innovation & Startup Incubator […]

டெங்கு பரவல் எதிரொலி

டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இணையவழியில் நடத்த தீர்மானித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அதேவேளை பல்கலைக்கழகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அனைத்து கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர் […]

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள்

விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முக்கியமான தீர்மானமாக எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் விவசாயம் உள்ளிட்ட தங்களது திறமைகளுக்கு ஏற்ற எந்தவொரு பல்கலைக்கழகப் படிப்பையும் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், இதற்கு முன்பு இந்த மாணவர்கள் கலை, மேலாண்மை, பௌதிக அறிவியல் […]

யாழ். பல்கலை அவதூறு வழக்கு திங்கட்கிழமை

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் மாணவிகள் மற்றும் பேஸ்புக் டிக் டொக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைச் சேர்த்து மொத்தம் 14 பேரை எதிர்மனுதாரர்களாகக் கொண்டு நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவியொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் நடைபெற்று […]

யாழ்ப்பாண தமிழருக்கு பிரிட்டன் மன்னரின் கௌரவம்

யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது ஐக்கிய இராச்சியத்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு, உயர்கல்வித் துறைக்கான அவரது சிறப்பான மற்றும் நீண்டகால பங்களிப்பை பாராட்டி பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மதிப்புமிக்க ‘நைட்’ (Knight) பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளார். வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற உத்தியோகபூர்வ முதலீட்டு விழாவில் பாரம்பரிய முறையில் அவரது தோள்களில் வாளால் தொட்டு இந்த கௌரவம் வழங்கப்பட்டதன் மூலம் இனிமேல் அவர் ‘சர் நிஷான் கனகராஜா’ என்ற […]

டெங்கு பரவல் பல்கலைக்கழகம் மூடல்

இலங்கையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் டி.ஆர். மதுர செனெவிரத்ன மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.எல். வசந்தகுமார தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக விடுதிகளும் இந்தக் காலப்பகுதியில் முழுமையாக மூடப்பட்டிருக்கும் நிலையில், இராஜகிரிய மற்றும் தெஹிவளை பகுதிகளில் உள்ள […]

GIT பரீட்சை 2026 விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்

2027ஆம் ஆண்டு உயர்தர (A/L) பரீட்சைக்கு முதல் முறையாக தோற்றவுள்ள 12ஆம் தர மாணவர்களுக்கான GIT பரீட்சை 2026 (General Information Technology Examination) விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் ஜூலை 16, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த GIT பரீட்சை 2026 க்கு விண்ணப்பிப்பவர்கள் தற்போது 12ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். மேலும் 2027ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதல் […]

2026 உயர்தரப் பரீட்சை ஆகஸ்டில் நடைபெறும்

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகுவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நடைபெறும் என தேசிய பரீட்சைகள் திணைக்களம் அறிவித்ததைத் தொடர்ந்து பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்வி நிறுவனத்தின் வழிகாட்டலின்படி உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாக கற்பிக்க […]