வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற உத்தியோகபூர்வ முதலீட்டு விழாவில் பாரம்பரிய முறையில் அவரது தோள்களில் வாளால் தொட்டு இந்த கௌரவம் வழங்கப்பட்டதன் மூலம் இனிமேல் அவர் ‘சர் நிஷான் கனகராஜா’ என்ற பட்டத்தைப் பயன்படுத்தும் தகுதியைப் பெற்றுள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான மன்னரின் புத்தாண்டு கௌரவப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர் சென்.
ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராக இருந்து 1985ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். அங்கு இளங்கலை மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெற்ற அவர் 2021ஆம் ஆண்டு முதல் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்து வருகிறார்.
மேலும் அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முதல் துணைவேந்தர் என்ற பெருமையையும் பெற்றுள்ள பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் இந்த சாதனை உலகத் தமிழர்களுக்கும் குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ள முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.



























