இந்த ஒத்துழைப்பின் மூலம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள Innovation & Startup Incubator மையத்திற்கு பாடத்திட்ட மேம்பாடு, காப்புரிமை (Intellectual Property) தொடர்பான ஆலோசனைகள், தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் முதலீட்டு வலையமைப்புகளுடன் இணையும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் ஆய்வகங்களில் உருவாகும் கண்டுபிடிப்புகள் வணிக ரீதியாக வெற்றி பெறக்கூடிய தயாரிப்புகளாக மாற்றப்படுவதை ஊக்குவிப்பதே முக்கிய இலக்காகும். Innovation Partnership
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கொழும்புப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்க மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு ஆணையாளர் பேராசிரியர் வெரஞ்ச கருணாரத்ன ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கேற்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்தின் கருத்துப்படி இந்த கூட்டாண்மை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்துவதுடன் இலங்கையில் புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும் அறிவுசார் தொழில்நுட்ப சூழலுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என நம்பப்படுகிறது.






























