முன்னாள் மாணவியொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ரகுராம் மற்றும் அந்த மாணவி இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துகள் மற்றும் உள்ளடக்கங்கள் தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டி மாணவி அவரது நண்பர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் இணைய இடையீட்டாளர்களாக பேஸ்புக், டிக் டொக், யூடியூப் ஆகியவற்றையும் எதிர்மனுதாரர்களாக இணைத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க நீதிமன்றம் வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதும் எந்த உத்தரவும் வழங்காமல் மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.



























