அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்த திட்டம் அல்ல என்றும் அவர் ஆட்சியில் தொடர்ந்திருந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் 10.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்டியிருப்பார் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
காலியில் இன்று (30) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் பொருளாதார நிலைமாற்றுச் சட்டத்தின் மூலம் தெளிவான பொருளாதார திட்டம் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் தற்போதைய ஆட்சியின் அனுபவமின்மையால் அது சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் செயல்திறன் மிக்க திட்டம் இல்லை என்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்தாலும் அதற்கேற்ப உள்ளூர் விலையை குறைக்கும் நடைமுறைகளும் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார். தற்போதைய நெருக்கடிகள் தவறான முடிவுகளின் விளைவாக உருவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.









Leave a Reply