நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும் நடைமுறையில் நிலவும் சூழ்நிலை அதற்கு முரணானதாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 695 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்த பின்னரும் டொலரின் பெறுமதி குறையாமல் தொடர்ந்து உயர்வது அரசாங்கத்தின் மீதான சந்தை நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக கூறினார்.
வங்கிகளில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட டொலர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் ஏற்றுமதியாளர்களும் டொலர்களை சந்தைக்கு வெளியிடுவதில் தாமதம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் வாகன இறக்குமதிக்காக பெருமளவில் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டமை டொலர் பற்றாக்குறையை அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். தற்போதைய பொருளாதார நிலை தொடர்ந்தால் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போன்ற சூழ்நிலை மீண்டும் உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் சந்தை நம்பிக்கையை மீட்டெடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.





Leave a Reply