சம்பவத்தையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரின் உயிர் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மேலும் காயமடைந்த இரு இளைஞர்களும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தூர் விபத்து இளைஞன் உயிரிழப்பு இருவர் கவலைக்கிடம்
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்ற டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் கடுமையாகக் காயமடைந்தனர்.

































