Tag: Sri Lanka Accident
மன்னார் விபத்து, கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த அருட்சகோதரிகள் சென்ற வாகனம் இன்று (22) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் மன்னார் மாவட்டத்தின் பறையனாலங்குளம் இரும்பு பாலம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான வாகனத்தில் மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச் […]
காலி–கொழும்பு பிரதான வீதியின் கட்டுக்குருந்த பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பாட்டியும் 12 வயதுடைய பேரனும் உயிரிழந்துள்ளனர். பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த விபத்து புதன்கிழமை (01) நள்ளிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளையில் நடைபெற்ற பொசன் போயா தின வழிபாடுகளை முடித்துவிட்டு நான்கு பேர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த பாட்டியும் பேரனும் […]
சிலாபம் பகுதியில் இருந்து இன்று (09) காலை கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கப்புவத்தை மற்றும் கந்தானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள புகையிரத கடவையை முச்சக்கர வண்டி கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மோதலின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்ததுடன் அதில் பயணித்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து […]
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்ற டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புத்தூர் வீதியில் மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் கடுமையாகக் காயமடைந்தனர். சம்பவத்தையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரின் உயிர் காப்பாற்ற முடியாமல் […]
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டைப் பகுதியில் கடந்த ஜூன் 1ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும் மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது 32 வயதுடைய மூத்த மகள் சஜீனி மகேஷிகா ஆகியோரே உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கர […]
வவுனியாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையின் கனகராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில்,வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலாளர் இமால்ட்டா சுகுமாரின் மகனான சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]
வவுனியா – ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் மாட்டுடன் மோதி கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென வீதியை குறுக்கே கடந்த மாட்டுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடனும் மோதியதில் பலத்த சேதமடைந்தது. விபத்தில் கடுமையாக காயமடைந்த சாரதி மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு […]