சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டைப் பகுதியில் கடந்த ஜூன் 1ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும் மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது 32 வயதுடைய மூத்த மகள் சஜீனி மகேஷிகா ஆகியோரே உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மகள் ஜூன் 2ஆம் திகதி உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாயாரும் ஜூன் 4ஆம் திகதி உயிரிழந்ததால் குடும்பத்தினருக்கும் பிரதேச மக்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்