கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முடியாது என ஊழியர் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தன்பின் குறித்த நபர் ஊழியரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோட்டை, மதிவெல பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனினும் தாக்குதலுக்குள்ளான ஊழியர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர விருப்பமில்லை என அறிவித்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி பொலிஸார் விடுவித்துள்ளனர்.
QR இன்றி பெட்ரோல் நிரப்ப மறுத்த ஊழியரை தாக்கிய நபர் கைது
கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஊழியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர் தேவையான கியூஆர் (QR) குறியீடு இன்றி எரிபொருள் பெற முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.































