சிலாபம் பகுதியில் இருந்து இன்று (09) காலை கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கப்புவத்தை மற்றும் கந்தானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள புகையிரத கடவையை முச்சக்கர வண்டி கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்ததுடன் அதில் பயணித்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













Leave a Reply