பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டனாவ் (Mindanao) கடல்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 முதல் 8.2 வரையிலான வலிமையுடன் பதிவான இந்த நிலநடுக்கம் சரங்கானி (Sarangani) கடற்கரைக்கு அண்மையில் ஏற்பட்டதாக சர்வதேச நிலஅதிர்வு மையங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகளின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி பலர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அண்டை நாடுகளின் சில கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் கடல் மட்ட மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில பகுதிகளில் எச்சரிக்கைகள் தளர்த்தப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பலத்த பிந்தைய அதிர்வுகள் தொடரக்கூடும் என அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.
பசிபிக் “Ring of Fire” எனப்படும் அதிக நிலஅதிர்வு அபாயப் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் உலகின் அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும். இந்தச் சம்பவம் அண்மைக் காலங்களில் அந்நாட்டைத் தாக்கிய மிகக் கடுமையான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.













Leave a Reply