தற்போது அந்தப் பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் புகையிரதங்கள் இயக்கக்கூடிய தரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வீதிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் பயணிகள் சேவையை மீள ஆரம்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
முன்னர் தலைமன்னார் பாதையில் காலை இரண்டு புகையிரத சேவைகளும் இரவு தபால் புகையிரதம் உட்பட தினமும் நான்கு சேவைகளும் இயக்கப்பட்டு கொழும்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணித்த ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்ததாகவும் அவர் நினைவூட்டினார். தற்போது புகையிரத எஞ்சின்கள் பற்றாக்குறை என்ற காரணத்தை முன்வைத்து சேவையை தாமதப்படுத்துவது பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கடுமையாக பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் புனரமைக்கப்பட்ட தலைமன்னார் பாதையில் வழமைபோல் பயணிகள் புகையிரத சேவையை உடனடியாக மீள ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



























