இந்த சூறாவளியினால் வீடுகள், வணிகக் கட்டடங்கள் மற்றும் அவற்றுள் இருந்த உடமைகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், நாட்டின் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்ச்செய்கைகள் இந்தச் சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளும் சீர்குலைந்துள்ளன.
இது தொடர்பில் உலக வங்கி முன்னெடுத்த மதிப்பீட்டுக்கமைய, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது































