நீண்ட காலமாக அகதி விண்ணப்ப முடிவுக்காக காத்திருக்கும் குழந்தைகள் தொடர்ந்து நிச்சயமற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை அவர்களின் கல்வி மனநலம் மற்றும் சமூக வாழ்க்கையை கடுமையாக பாதிப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக நெதர்லாந்தில் வளர்ந்து, அந்நாட்டு சமூகத்தில் இணைந்துள்ள சிறார்களை மீண்டும் நாடுகடத்துவது மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் அவர்களுக்கு சட்டபூர்வமான குடியிருப்பு அனுமதி வழங்கி பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த பிரச்சாரம் வலியுறுத்துகிறது. Europe News
இதுகுறித்து அரசு இதுவரை எந்த புதிய கொள்கை முடிவையும் அறிவிக்கவில்லை என்றாலும், அகதி சிறார்களின் நிலைமை குறித்து நாடு முழுவதும் மீண்டும் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
























