தென்மேற்கு பருவமழையுடன் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் வேகமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது 89 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயப் பகுதிகளாகவும் 1,185 பிரிவுகள் மிதமான பாதிப்பு பகுதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மொத்த நோயாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் கொழும்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிகளவிலான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் டெங்கு பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், மக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருந்து நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
































