குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாகன சாரதிகள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.































