அதிரடி சர்வீஸ் சக்திவாய்ந்த ஷாட்கள் மற்றும் அழுத்தமான தருணங்களில் சிறப்பாக விளையாடும் திறன் ஆகியவற்றால் இருவரும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளனர்.2018 அமெரிக்க ஓபனில் முதல் முறையாக மோதிய சபலென்கா மற்றும் ஒசாகா அதன் பின்னர் நீண்ட காலம் ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடவில்லை. ஆனால் 2026 ஆம் ஆண்டில் மட்டும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ள இந்த இரு நட்சத்திரங்களும் தற்போது விம்பிள்டன் மேடையில் மீண்டும் பலப்பரீட்சைக்கு தயாராகியுள்ளனர்.
புல்வெளி மைதானத்தில் சபலென்காவின் ஆக்கிரமிப்பு ஆட்டமா? அல்லது முக்கிய போட்டிகளில் அனுபவம் மிக்க ஒசாகாவின் அமைதியான ஆட்டமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகம் பேசப்படுகிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனை காலிறுதிக்குள் முன்னேறுவதோடு மட்டுமல்லாமல் விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் முக்கிய போட்டியாளராகவும் உருவெடுப்பார் என்பதால் இந்த மோதல் தொடரின் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.































